கோவாவில் இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் சார்பில் 19வது சர்வதேச மக்கள் தொடர்பு மாநாடு நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது.
2025 ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய இமேஜ் பில்டிங் ஏஜென்சி என்ற பிரிவில், சாணக்கியா விருது வழங்கப்பட்டது. கன்னட திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் பிரமோத் ஷெட்டி வழங்க, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்குமார் சிங்காரம் விருதினைப் பெற்றுக்கொண்டார். மேலும், “நிறுவனத்திற்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் சிறந்த மக்கள் தொடர்பு சேவைக்கான விருது” என்ற பிரிவிலும் விருது வழங்கப்பட்டது.

