நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ‘நேரு கல்விக் குழும ஒலிம்பியாட் 2025’ நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினராக நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார், சிறப்பு விருந்தினராக கோவை விமானப்படைப் பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ராமகிருஷணன் பங்கேற்றார்.

நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான கிருஷ்ணகுமார் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டினார். நிர்வாக இயக்குநர் நாகராஜா வரவேற்றார்.

NEHRU 1

மொத்தம் 56 பள்ளிகளைச் சேர்ந்த 2000 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.