இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துளிர் கண்காட்சி மற்றும் வினாடி வினா நடைபெற்றது. இந்துஸ்தான் கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் பல படைப்புகளை காட்சிப் பொருளாக வைத்தனர். வினாடி வினா சுற்றுகள் நடைபெற்றது. மாணவர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகளை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் ரமணி, ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

