இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மனநல தினம் 2025 கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களுக்கிடையே தெருநாடகம், வினாடி வினா, கோஷ வரிவடிவு, போஸ்டர் தயாரித்தல் மற்றும் புகைப்படம் போன்ற பல்வேறு துறைகளிடையே போட்டிகள் நடத்தப்பட்டன.
முக்கிய விருந்தினராக விப்ப்ரா மைண்ட்கேர் மற்றும் நேச்சுரல் ஹீலிங் சென்டர் ஆலோசகர் டாக்டர். வினோத் பாலாஜி கலந்து கொண்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் பொன்னுசாமி, சமூகப்பணித்துறைத் தலைவர் புனிதா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
