கோவை, கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் நல்ல கவுண்டன்பாளையத்தில், பிரபஞ்ச அமைதி ஆசிரமம் 25 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், மன வளர்ச்சி குன்றியோர், சிறையிலிருந்து விடுதலை ஆனவர்கள், குடும்பத்தால் மற்றும் ஊரால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இயன்ற உதவிகளைச் செய்து உதவுமாறு பிரபஞ்ச அமைதி ஆசிரமம் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான குருஜி ஷிவாத்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு தனியாகவோ, நிறுவனத்தின் சார்பாகவோ அல்லது தொழிலாளர்கள் / நண்பர்கள் / உறவினர்களுடன் இணைந்தோ தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தை 99655 20285, 97509 20585, 98422 05260 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
