தீபாவளி 2025 சிறப்பு விற்பனைக்காக, கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30% அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
அதன்படி மருதம் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழாவினை கோவை ஆட்சியர் பவன்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். முதல் விற்பனையை சரண்யா பிரபு பெற்றுக் கொண்டார்.

விழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு பழசுக்கு புதுசு திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய / கிழிந்த நிலையிலுள்ள ஒரிஜினல் ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை கொடுத்துவிட்டு புதிய பட்டுப் புடவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

