சென்னை சென்ட்ரல் – போத்தனுார் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் 25ம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதி வரை வியாழக்கிழமைகளில், சென்னை சென்ட்ரல் – போத்தனுார் (எண்: 06123) சிறப்பு ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு போத்தனுார் ரயில் நிலையம் வந்தடையும்.

வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில், போத்தனுார் – சென்னை சென்ட்ரல் (எண்: 06124) சிறப்பு ரயில், மாலை 6:30 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.