கோவையில் சொத்து வரி நிலுவைத் தொகை, தொழில்முறை வரி மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்த சிறப்பு ஏற்பாடுகளை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி பல இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் ஞாயிறு (செப்டம்பர் 14) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மண்டல வரி வசூல் மையங்களும், நியமிக்கப்பட்ட சிறப்பு வசூல் முகாம்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
கிழக்கு மண்டலம், 55வது வார்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெறும். மேற்கு மண்டலம், 38வது வார்டு கல்வீராம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 16வது வார்டு காமராஜர் நகர் டி.வி.எஸ். நகர் வார்டு அலுவலகத்திலும் நடைபெறும்.
வடக்கு மண்டலம், 15வது வார்டு சுப்பிரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், 25வது வார்டு காந்தி மாநகர் வார்டு அலுவலகத்தில் முகாம்கள் செயல்படும். தெற்கு மண்டலம் 92வது வார்டு, குனியமுத்தூர் பி.கே. புதுார் விநாயகர் கோவில் தெருவில் நடைபெறும். மத்திய மண்டலம், 63வது வார்டு ராமநாதபுரம் மாநகராட்சி வணிக வளாகத்தில் முகாம் நடக்கிறது.
