என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி சிறந்த உள்கட்டமைப்பு வசதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், சிறந்த கற்றல் கற்பித்தல் முறை, தேசிய தரச்சான்றிதழ் பெற்ற பட்டய பாடப்பிரிவுகள் போன்ற அம்சங்களுக்காக, தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக (2024-2025) சண்டிகரில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் என்.ஐ.டி.டி.டி.ஆர், இயக்குநர் போலாராம் குர்ஜார், ஹரிம்பூர் என்.ஐ.டி.டி இயக்குநர் ஹிராலால் முரளிதர் சுர்யவன்ஷி, ஹரியானா உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், முதன்மை செயலர், சத்பிர் சிங் காடியான் ஆகியோர் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருதினை வழங்கினர்.
இதனை என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் விரிவுரையாளர் கதிரேஸ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கல்லூரியின் ஆட்சிமன்ற குழுத்தலைவர் மாணிக்கம் மற்றும் தலைவர் ஹரிஹரசுதன் ஆகியோர் சாதனைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
