நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான கிருஷ்ணகுமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.  விழாவில் சிங்காரிமேளம், புலிக்கலி, நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கேரள பாரம்பரிய நடனங்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உறியடி, வடம்வலி போன்ற போட்டிகள் நடந்தன.

நிகழ்வை கல்லூரி முதல்வர் விஜயகுமார், சி.சி.ஹெச்.ஹெச்.இ இயக்குநர் மாலதி, ஒருங்கிணைப்பாளர் ரஜனி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.