கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் கவுன்சில் (சிபிசி) சார்பில் “மனிதவள மாநாடு 2025” 5வது பதிப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

மனிதவள சவால்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குனர் பூங்கொடி, கௌரவ விருந்தினராக ஏ.பி.டி. குழுமத்தின் இயக்குனரும், ராம்ராஜ் குழும நிறுவனங்களின் நிறுவன மூலோபாய ஆலோசகருமான வெங்கடரமணா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

2 11

நிகழ்வில் சிபிசி தலைவர் சுதாகர், துணைத் தலைவர் மணி, சிபிசி முன்னாள் தலைவரும், ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவளத் துறை இயக்குநருமான கவிஞர் கவிதசான் மற்றும் சிபிசி கெளரவ செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

4 7 3 8