சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் உலக மக்களால் ‘யோக குரு’ என்று போற்றப்பட்ட பள்ளியின் நிறுவனர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் 23 ஆம் ஆண்டு ‘குரு பூஜை’ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு நிகழ்வாகத் திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது.  இதில் 12ம் வகுப்பு மாணவிகளும், ஆசிரியைகளும் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.  இதனைப் பேரூராதீனம், கௌமாரச் செல்வி மரகதம் அம்மையார் நடத்தினார்.

பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி தலைமை தாங்கினார். பள்ளிச் செயலர் கவிதாசன், முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்துகொண்டு குருதேவருக்கு மலர் வழிபாடு செய்தனர்.