ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரின் டிரெய்னிங் கம்பெனி கமாண்டர் மேஜர் ஷ்ரே கோட்னாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தினரின் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேச்சுப்போட்டி, காய்கறி வடிவமைப்பு, உடையலங்காரம், முக ஓவியம் மற்றும் குழு நடனம் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
