கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்துடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஆர்.எஸ். புரத்தில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எஸ்.என்ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குநர் யசோதா ஆகியோர் கையொப்பமிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.

இதன்மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப், துறை சார் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களின் இறுதியாண்டு கல்விசார் ஆய்வுத் திட்டம், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். மேலும் இரு நிறுவனமும், கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், உயிரி தொழில்நுட்பத் துறைத்தலைவர் ரத்தீஷ்குமார், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், தலைமை வனப் பாதுகாவலர் கணேஷ்குமார் ஐ.எப்.எஸ்., விஞ்ஞானி முனைவர் செந்தில்குமார், துணை வனப் பாதுகாவலர் மாதவராஜ் ஐ.எப்.எஸ்., தலைமை தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.