கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் குப்பை தரம்பிரிக்கும் மையம் அமைவதை தடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து வடக்கு சட்டமன்ற உறுபினர் அம்மன் கே அர்ச்சுணன் மனு அளித்தார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் மாநகராட்சி சார்பாக குப்பைகள் கொட்டி தரம்பிரிக்கும் மையம் அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

ஆனால் இப்பகுதியை சுற்றிலும் அரசு, தனியார் பள்ளிகளும், 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவரும் குடியிருப்பு பகுதியாகவும் உள்ளது. இந்தப் பகுதியில் குப்பைகள் தரம்பிரிக்கும் மையத்தை ஏற்படுத்தினால் பொதுமக்கள் நோய்தொற்றுகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாககூடும் என கூறப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதிலும் சிரமங்கள் ஏற்படும்.

இந்நிலையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் குப்பைகள் கொட்டி தரம்பிரிக்கும் மையம் அமைவதை தடுக்க வலியுறுத்தி அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர்,  மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து இன்று மனு அளித்தனர்.