ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் மாநில அளவிலான கல்லூரி பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆறாவது ஆண்டாக நடத்தப்பட்டது.

15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 56 கல்லூரிகளைச் சார்ந்த 628 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆடவர், மகளிர் எனத் தனித்தனி பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது. கேரம், செஸ் போன்ற உள் அரங்க விளையாட்டுப் போட்டிகளும், கிரிக்கெட், வாலிபால் பேஸ்கட்பால், பேட்மிட்டன் போன்ற  வெளி அரங்க விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.

rcas 2

ரத்தினம் கல்லூரியின் செயலாளர் மற்றும் முதன்மை நிர்வாகி மாணிக்கம், கல்லுரியின் முதல்வர்  பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ் ஆகியோர் வழகட்டுதல் படி விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றது.

கோவை ரோட்டரி கிளப் தலைவர் பிரபு, ரோட்டரி கிளப் செயலாளர் விமல் ஆகியோர் கலந்துகொண்டு ஒட்டு மொத்தப் போட்டிகளிலும் பங்கேற்று, ஆடவர் பிரிவில் வெற்றி பெற்ற சிவகாசி, மெப்கோ ஸ்க்லெங்க் பொறியியல் கல்லூரிக்கும், மகளிர் பிரிவில் வெற்றி பெற்ற அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்திற்கும் ஒட்டு மொத்த சுழற்கோப்பை வழங்கினர்.