கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டாடும் வகையில் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” பிப்ரவரி 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற்று வருகிறது. இத்திருவிழா தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, கலைகள், உணவு முறை மற்றும் வாழ்வியல் போன்றவற்றின் செழுமையைப் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4 2

இத்திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டுப் பொருட்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், நாட்டு மாடுகள், குதிரைகள் மற்றும் பிற கால்நடைகளின் கண்காட்சியும் நடைபெறுகிறது. மார்ச் 7 முதல் 9 வரை “நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தை” பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

3 4

தமிழ்ப் பண்பாட்டு கலைகளை முன்னிறுத்தி, பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், வள்ளி கும்மி போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மாலை நேரங்களில் நடைபெறுகின்றன. மேலும், தஞ்சாவூர் ஓவியம், வில்லியனூர் டெரகோட்டா, தோடா எம்பிராய்டரி போன்ற 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் இடம்பெற்றுள்ளன.

5

இத்திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் சிலம்பப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி போன்றவை நடத்தப்படுகின்றன. மார்ச் 9-ஆம் தேதி கொங்குநாட்டு வீர விளையாட்டான “ரேக்ளா பந்தயம்” நடைபெற உள்ளது.

1 4

இவ்விழாவில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனத் தமிழ்த் தெம்பு விழா குழுவின் தன்னார்வலர் வள்ளுவன் தெரிவித்தார்.