மும்பையில் உலகத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு “திறன் வளர்க்கும் தலைசிறந்த கல்லூரி” என்ற விருது வழங்கப்பட்டது.
மகளிர் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்தக் கல்வி நிறுவனமானது, மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான திறன்களை மேம்படுத்தவும், தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கவும் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
50க்கும் மேற்பட்ட முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, பிஎஸ்சி கணினி அறிவியலில் டேட்டா அனாலிடிக்ஸ் மற்றும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற புதிய துறைகளில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கின்றது. காக்னிசன்ட், மஹிந்திரா, பஜாஜ் ஃபின்செர்வ் மற்றும் நேச்சுரல்ஸ் சலூன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, தொழில்நுட்ப மற்றும் ஆன்லைன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த முயற்சிகள், மாணவிகளின் திறன் மேம்பாடும், வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் அதிகரிக்கப்படுவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த தொடர் முயற்சிகளை பாராட்டி, கல்லூரி மாணவிகளின் திறன் வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
