ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகளின் சார்பில், ‘கலை, இலக்கியப் பண்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலப் பங்களிப்பு’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்தில், துருக்கி மலட்யா டுர்கட் ஒஸால் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மொழிகளுக்கான துறைத்தலைவர் அகமத் செலுக் மற்றும் திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்புத்துறை உதவிப்பேராசிரியர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அகமத் செலுக் தனது உரையில் “மொழிகள், கலை, இலக்கியங்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் புதுமைகள்; கலை, இலக்கிய வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரும் வரமாக அமைந்துள்ளது” என்று கூறினார். பின்னர், மாரியப்பன் இலக்கியத் துறைகளில் “படைப்பாற்றல், ஒப்பீடு, மொழிபெயர்ப்பு” என பல்வேறு செயல்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதையும், “தொழில்நுட்பத்தைக் கடந்த நுணுக்கங்களை இலக்கிய வல்லுநர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வு கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்றது. இதில், கலை, இலக்கியத் துறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தொடர்பைப் பற்றிய ஆய்வாளர்களின் கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த கருத்தரங்கில் சுமார் 250 பங்கேற்பாளர்கள் பல்வேறு கல்லூரிகளில் இருந்து கலந்து கொண்டனர்.