கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறை சார்பில் மண்டல அளவில் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர்.

மொத்தம் 250க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் அவைகளை மதிப்பீடு செய்து மாணவர்களின் திறனை பாராட்டினர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

1 55

இந்த மாநாடு மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் ஒரு முக்கிய அனுபவமாக அமைந்ததுடன், கல்வியாளர்களுக்கு அறிவியல் கல்வியை மேம்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் இருந்தது.