நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் 69வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுத் தின விழா நடைபெற்றது.
தலைமை விருந்தினராக கேட்ஸ் சாஃப்ட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர் வேலாயுதம், அக்ரோமெட் ஸ்பார்க் டெக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் சி.இ.ஓ ராஜேஷ்குமார், சிறப்பு விருந்தினராக சிற்றுளி அறக்கட்டளையின் நிறுவனர் குணா கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் முதல்வர் அசோக், முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

