எல்சி மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் 50வது இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம் ரத்னபுரியில் உள்ள ஸ்ரீ லாலா மஹால் வளாகத்தில் நடைபெற்றது. பல்சமய நல்லுறவு இயக்கத்துடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் கலந்துகொண்டார். இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை, குடலியல் மற்றும் மகப்பேறு சார்ந்த பிரச்சினைகள் குறித்த மருத்துவ ஆலோசனை பலருக்கு வழங்கப்பட்டது.

எல்சி மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ராஜன், எண்டோஸ்கோபி பரிசோதனையின் அவசியம், குறிப்பாக புற்றுநோய்கள் உள்ளிட்ட கடுமையான குடல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதில் அதன் முக்கிய பங்கு குறித்து விளக்கினார்.

ELCE 1

முகாமில் மருத்துவ அறக்கட்டளையின் தாளாளர் டாக்டர் வித்யா ராஜன், மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.