ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், 38-வது ஆண்டு விளையாட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். உடற்கல்வி இயக்குநர் சரவணன், விளையாட்டுத் துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் படைத்த, சாதனைகளைப் பட்டியலிட்டு ஆண்டறிக்கை வாசித்தார்.

2 36

கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறை கண்காணிப்பாளர் ஸ்நேகா பிரின்ஸி, விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக் கோப்பைகள் வழங்கிப் பாராட்டினார்.

மாணவர்கள் பிரிவு விளையாட்டுப் போட்டிகளில், 33 புள்ளிகள் பெற்று எம்.பி.ஏ. மற்றும் சமூகப்பணியியல் துறைகளும், மாணவிகள் பிரிவு விளையாட்டுப் போட்டிகளில் 40 புள்ளிகள் பெற்று பி.காம். சி.எம்.ஏ. துறையும் முதலிடம் பிடித்தன. மாணவர்கள் மற்றும் மாணவிகள் பிரிவில் 69 புள்ளிகள் பெற்று எம்.பி.ஏ. மற்றும் சமூகப்பணியியல் துறைகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.