ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் 31வது பட்டமளிப்பு விழா எஸ்.என்.ஆர். கலையரங்கில் இன்று (07.12.2024) நடைபெற்றது. நிகழ்விற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகச் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி பங்கேற்றார். இதில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட வகுப்புகளில் பயின்ற 298க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பட்டங்கள் பெற்றனர்.