டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார்.

கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் பழனிசாமி, கல்வி சார் இயக்குநர் மதுரா பழனிசாமி முன்னிலை வகித்தனர்.

NGP 3

 

சிறப்பு விருந்தினராக இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் தெற்கு மண்டல இயக்குரும், உஸ்மானியா பல்கலைக்கழக சமூகவியல் துறைப் பேராசிரியருமான சுதாகர் ரெட்டி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பேசுகையில்: கோவை இயற்கை எழில் சூழ்ந்த மிகச்சிறந்த கல்வி நகரமாகவும் திகழ்கிறது. அந்த நகரத்தில் டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனம் மாணவர்களின் வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் அக்கறை உடன் செய்யலாற்றுவது மிகுந்த மகிழச்சியைத் தருகிறது.

சர்வதேச அளவில் பல்வேறு துறை சார்ந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு மாணவர்கள் தங்களைத்  தகுதிப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில், பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகளையும், வசதிகளையும்   இந்நிறுவனம் செய்து கொடுக்கிறது. தாங்கள் பெற்ற பட்டத்தை வைத்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். பெற்றோர்களுக்கும், சமூகத்திக்கும் உதவியாக இருக்க வேண்டும்  என்றார்.

NGP 2 scaled

கல்லூரியின் தலைவர் நல்ல பழனிசாமி பேசுகையில்: “கற்றது கைம்மன் அளவு கல்லாதது உலக அளவு” மாணவர்கள் அர்ப்பணிப்புடன் கற்றல் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். கல்வி அறிவுடன் உலகில் மாற்றம் பெற்று வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

விழாவில்1992 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். இளங்கலையில் 1479, முதுகலையில் 431 மாணவர்களும், பல்கலைக்கழகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற இளங்கலை 54 மாணவர்களும், முதுகலையில் 28 மாணவர்களும் பட்டம் பெற்றனர்.

NGP 5

நிகழ்வில், என்.ஜி‌.பி. கல்வி குழுமங்களின் முதன்மைச் செயல் அலுவலர் புவனேஷ்வரன்,  முதன்மைச் செயல் இயக்குநர் நடேசன், கல்விசார்  இயக்குனர் முத்துசாமி, கல்லூரியின் முதல்வர் சரவணன்,   துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்