ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதன்மை விருந்தினராக சர்வதேச விளையாட்டு வீரர் முகமது நிசாமுத்தீன் கலந்துகொண்டார்.

விளையாட்டு விழாவில்16 விளையாட்டுகள், 10 தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 1200 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் 398 மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றனர்.

WhatsApp Image 2026 03 20 at 2.54.30 PM 1

16 மாணவர்களுக்கு அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ரத்தினம் குழும இயக்குநர் ஷிமா செந்தில், சி.இ.ஓ மணிக்கம், சி.பி.ஓ நாகராஜ், உடற்கல்வி இயக்குநர் ஜொய்சி, உதவி உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.