கோவை காந்தி மாநகர் பகுதியிலும், கவுண்டம்பாளையம், ஜீவா நகர் பகுதியிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.3.36 கோடி மதிப்பீட்டில்துவங்கிய ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்கும் பணிகள் தற்போது நிறைவுபெற்று உள்ளது என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த முதல்வர் படைப்பகத்தில் பட்டதாரிகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் போட்டி தேர்வுகள், வங்கி மற்றும் இரயில்வே உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் சுமார் 48,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
மேலும், கணினி வசதி மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சிகள் வழங்குவதற்கான கூடங்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான பரந்த அளவிலான சேவைகள், வசதிகள் மற்றும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வகையில், இப்படைப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இரண்டு இடங்களிலும் தலா 500க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முதல்வர் படைப்பகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளது.
