ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய சேவை திட்ட அணி மற்றும் கிணத்துக்கடவு மனவளக்கலை ஆழியார் அறிவுத் திருக்கோவில் இணைந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான 10 நாள் யோகா பயிற்சி முகாம் நடத்தியது. தினமும் சுமார் 1,800 மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு ஆசனங்கள், பிராணாயாமா மற்றும் தியானம் ஆகியவற்றை நடைமுறை வழக்கத்தில் கற்றுத்தரப்பட்டது. மன அழுத்த மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து விளக்க வகுப்புகளும் நடத்தப்பட்டன. மாணவர்களுக்காக தமிழ், ஆங்கில புத்தகங்கள் வழங்கப்பட்டன.

rcas 5

முகாமின் நிறைவு விழா செப்டம்பர் 25 நடைபெற்றது. இதில் 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ரத்தினம் கல்விக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் மாணிக்கம், முதல்வர் பாலசுப்ரமணியன், துணை முதல்வர் சுரேஷ், ஆய்வு மற்றும் மேம்பாட்டு புல முதன்மையர் சபரிஷ், வணிகவியல் புல முதன்மையர் ஹேமலதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலக சமுதாய சேவா சங்கம், கோவை மண்டலம் தலைவர் ஆறுச்சாமி, துணை தலைவர் பொன்னுசாமி,செயலாளர் செந்தில்குமார், கிணத்துக்கடவு மனவளக்கலை அறக்கட்டளை தலைவர் பிரபாகரன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர்  முருகன் மற்றும் யோகா ஆசிரியர்கள் பங்கேற்றனர்.