ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் கோவை பிரிவு இணைந்து “செயற்கை நுண்ணறிவால் இயங்கும் 3டி பிரிண்டிங்கில்  இன்னோவேஷன் ஆட்டோமேஷன் துறை ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கருத்தரங்கை நடத்தியது.

சிறப்பு விருந்தினராக  பாலக்காடு  இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியை சார்ந்த இணை பேராசிரியர் கேசவன் கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து, செயற்கை நுண்ணறிவு, செயற்கை மற்றும் உற்பத்தி ஆட்டோமேஷன் துறையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி விவரித்தார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவர் கருப்புசாமி  இரண்டு நாள் கருத்தரங்கில் நடைபெறும் செயல்முறைகளை பற்றி விவரித்தார்.  கருத்தரங்கின் விழா மலரை  இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் கோவை பிரிவின் கௌரவத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். பொறியியல் கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது பற்றியும் அதன்மூலம் புதுமைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் தனது துவக்க உரையில் எடுத்துரைத்தார்.

அகில இந்திய அளவில் பல்வேறு துறைகளை சேர்ந்த  சுமார் 120 பேர் பங்கேற்று தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.