ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக சொற்பொழி நிகழ்ச்சி கிக்கானி மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பம்சமாக அருள் வளர்செம்மல் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோவில் பக்தர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன், ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், சரவணம்பட்டி ஸ்ரீ கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் தலைவர் நாகராஜன், திருப்பூர் சேக்கிழார் புலிதப் பேரவைத் தலைவர் மூர்த்தி, குருக்கள் பட்டி ஸ்ரீ கடைமடை அய்யனார் ஸ்ரீ கருப்புசாமி திருக்கோவில் தலைவர் முருகேசன் ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்தார்.
19 ஆம் ஆண்டு நடைபெறும் விழாவில் முதல் நாளில் பட்டிமன்ற பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட பாரதி பாஸ்கர் பங்கேற்று, அருளாளர் இராமானுஜர் குறித்து சொற்பொழிவாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், பாரதீய வித்யா பவன் பள்ளி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, டைனமிக் நடராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.