மேட்டுப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டனின் புதிய கிளை திறக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ளது என்றால் மிகையல்ல. தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் தனது ஷோரும்களைத் திறந்து வெற்றி கண்டுள்ளது. இந்தியாவிலேயே வேட்டிக்கென்று தனி முத்திரை பதித்து முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம் ராம்ராஜ் காட்டன் ஆகும்.

இந்நிலையில், காரமடை ரோடு, ஆக்ஸிஸ் வங்கி எதிரில், மேட்டுப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது புதிய கிளையைத்  துவங்கி உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் தலைமையேற்றார். தொடர்ந்து, மேட்டுப்பாளையம் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை செயலாளர் ராஜேந்திரன் புதிய கிளையைத் திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகரமன்ற தலைவர்  மெஹரிபா பர்வீன் மற்றும் மேட்டுப்பாளையம் சூப்பர் ஆட்டோ ஸ்பேர்ஸ் ஜோதிமணி குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.