கோவை மருதமலை வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கும் உணவு தேடி உலா வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐ.ஓ.பி காலனி பகுதியில் அண்மையில் நள்ளிரவில் ஒரு யானை தன் குட்டியுடன் வந்து, அங்கு உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டில் வளர்க்கப்பட்ட அலங்கார தாவரங்களை உட்கொண்டுள்ளது. அதன் பின்னர் வீட்டின் கதவை உடைத்து தும்பிக்கையை உள்ளே விட்டு உணவுப் பொருட்களைத் தேடி உள்ளது. நள்ளிரவு யானை வந்ததைப் பார்த்து, கதவை உடைக்கும் சத்தத்தைக் கேட்டு குடும்பத்தார், பதறி அடித்து மாடி அறைகளுக்கு ஓடி உள்ளனர்.

யானைகள் சிறிது நேரம் கழித்து அங்கு இருந்து வனப் பகுதிக்குச் சென்றது . ஐ.ஓ.பி காலனி பகுதியில் அவ்வப்போது யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உரைந்து இருக்கின்ற நிலையில், வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் வருவதைத் தடுத்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.