இரத்தினம் கல்விக்கழுமத்தில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை இரத்தினம் கல்விக்குழுமத்தின் செயலாளர் மாணிக்கம், இரத்தினம் குழுமத்தின் துணைத்தலைவர் நாகராஜ் தலைமையில் துவக்கி வைத்து, இனிதே நடைபெற்றது.
மாணவிகள் கலாச்சார உடையணிந்து அணிவகுப்பு நடைபெற்றது. ஜண்ட இசை, மத்தளம் இசையுடனும் மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து மாணவ, மாணவிகளின் விழாவாக கொண்டாப்பட்டது.
அத்திப்பூ கோலம் இட்டு மாணவிகளின் ஒணத்தை வரவேற்றார்கள். மாணவிகளின் குழு நடனங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் மையமிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வு மாணவர்களுக்கு விழிப்புணர்வாக அமைந்தது. வெளிநாட்டு மாணவ, மாணவிளுக்கு இவ்விழா நாட்டின் பெருமையை பிரதிபலிப்பாக அமைந்து.
இரத்தினம் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் , கல்லூரி துணைமுதல்வர் சுரேஸ் , ஆய்வுத்தறை புல முதன்மையர் சபரிஸ் வணிகவியல்த் துறை புலமுதன்மையர் ஹேமலதா ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இரத்தினம் தொழில்நுட்பம் வளாகம், உடல் இயக்க மருத்துவ கல்லூரி, மருந்தியல் கல்லூரி, விஸ்டம் மேலாண்மை கல்லூரி ஆகிய கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் 7000 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.