டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் இளங்கோவடிகள் தமிழ்மன்றம் சார்பில், தாய்மொழியின் சிறப்பினைப் போற்றும் வகையில், உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் குப்புச்சாமி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.  தாய் மொழியின் சிறப்பு குறித்துச் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.

என்.ஜி.பி கல்விக்குழுமங்களின் கல்விப்புல இயக்குநர் முத்துசாமி தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை குறித்து சிறப்புரையாற்றினார். இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கினார்.