டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி மற்றும் டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மதுரா பழனிசாமி தலைமை தாங்கினார். கல்விசார் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பல்வேறு பள்ளி முதல்வர்களுக்கு “டாக்டர் தவமணிதேவி பழனிசாமி பள்ளித் தலைமைத்துவச் சிறப்பு விருது” வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கோவை ஃபிக்கி ஃப்ளோ நிறுவனங்களின் தலைமைப் பிரதிநிதி அபர்ணா சுன்கு கலந்து கொண்டு பேசுகையில், மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும், தலைமைத்துவம் மிகவும் அவசியம். பெண்களின் உரிமைகளுக்குக் கிடைக்கும் முழுச் சுதந்திரம் தான் குடும்பத்தின் வெற்றி. அதுவே எதிர்கால சமூகத்தின் வெற்றி என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் கலை கல்லூரியின் முதல்வர் சரவணன், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பிரபா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
