மகளிர் தினத்தை முன்னிட்டு, வாசவி விருக்ஷம் க்ளப் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸில் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் வாசவி விருக்ஷம் க்ளப் செயலாளர் லக்ஷ்மி பிரியா ஸ்ரீதரன் கூறியதாவது: கோவையில் முதல் முறையாக பெண்களுக்கான மாரத்தான் போட்டியினை பெண்களாகவே ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். இதில் 14 வயது முதல் 44 வயதுவரையிலான பெண்கள் கலந்து கொண்டு ஓடினர்.

Marathon 1

இதன் மூலமாக கிடைக்கும் நிதியை கொண்டு தேசிய கண்பார்வையற்றோர் ஆணையத்தின் கீழ் கண் பார்வைக்காக காத்திருக்கும் பல்வேறு பெண்களுக்கு, தேவையான கல்வி, மருத்துவ சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக வழங்கப்பட உள்ளது எனக் கூறினார்.

சிறப்பு விருந்தினராக, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கலந்து கொண்டு, மாரத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தார். கேஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம், டாக்டர் சுமன், வாசவி விருக்ஷம் அறக்கட்டளை தலைவர் பிரேம் துலாரி பாலா, பொருளாளர் விஜயலட்சுமி விஜயகுமார், எஸ்எஸ்விஎம் பள்ளி தலைவர் மணிமேகலை, ஸ்ரீஷா, வில்வா ஜிவல்லரி உரிமையாளர் விஜயகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.