இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் கட்டிடப் பொறியியல் துறை மற்றும் இந்திய கான்கிரீட் நிறுவனம் கோயம்புத்தூர் மையம் இணைந்து, ‘கான்கிரீட்டின் கலை: கட்டிடத் திறன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கை நடத்தினர்.
முக்கிய வல்லுநர்கள், தொழில் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கான்கிரீட் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள், நிலைத்தன்மை சார்ந்த நடைமுறைகள், 3D அச்சு தொழில்நுட்பம், ஜியோபாலிமர் கான்கிரீட் உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தனர். மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களின் கேள்வி-பதில் அமர்வுகள் நடைபெற்று, தொழில்துறை மற்றும் கல்வித் துறையை இணைக்கும் ஒரு முக்கியமான மேடையாக இந்த கருத்தரங்கு அமைந்தது.
நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா, கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.