ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘எஸ்.ஆர்.இ.சி உட்சவா 2026’ என்ற தேசிய அளவிலான டெக்னோ-கலாச்சார விழா கடந்த ஜனவரி 30, 31 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார்.

விழாவில் 60க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற போட்டிகள், 10க்கும் மேற்பட்ட பணிமனைகள் நடைபெற்றன. பேப்பர் பிரசண்டேசன், புரோஜக்ட் டைமன்ஸ்ரேசன், வினாடி வினா, டிசைன் சேலன்ஸ், கோடிங் காம்பிட்டேசன்ஸ் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் 2000க்கும் அதிகமான மாணவர்கள் நேரடியாக பங்கேற்று தங்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர்.

விழாவில் சிறந்த மற்றும் புதுமையான யோசனைகள் எஸ்.ஆர்.இ.சி ஸ்பார்க்-ல் இன்கியுபேட் செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நிதி உதவி, வழிகாட்டுதல் மற்றும் இன்டென்சீப் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் முதல் நாளில் டி.வி. பிரபலங்கள் அசார், டி.எஸ்.கே, நக்கலைட்ஸ் சசி, அருண் ஆகியோர்களின் நிகழ்ச்சிகளும், 2வது நாளில் பாடகர்கள் சத்யாபிரகாஷ், புனா மற்றும் 432 ஹெர்ட்ஸ் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.