டாடா நியூவின் ‘ஃபிக்சட் டெபாசிட் சந்தை’யை அறிமுகம் செய்வதன் மூலம் சில்லறை முதலீடுகள் களத்தில் தனது செயல்பாடு விரிவாக்கத்தை டாடா டிஜிட்டல் அறிவிக்கிறது.
சேமிப்பு வங்கிக்கணக்கு ஏதுவுமின்றி 9.1% வரை வட்டி விகிதம் தரும் முன்னணி நிதி நிறுவனங்களின் ஃபிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அதிகாரத்தை புதுமையான இந்த டிஜிட்டல் தளம் தருகின்றது.
முன்பு எப்போதும் இருந்ததை விட முதலீடு மிக சுலபமானதாகவும் எளிதில் பெறக்கூடியதாகவும் இப்போது மாறிவிட்டது. தடையற்ற டிஜிட்டல் நிகழ் முறை மூலம் பத்தே நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்கள் தமது முதலீட்டுப்பயணத்தை ரூ.1000 என்ற மிகக்குறைந்த முதலீட்டிலிருந்து துவங்கலாம். இதனால் துவக்க முதலீடு எவ்வளவாக இருந்தாலும் அனைவருக்கும் நிதி ரீதியான அதிகாரம் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் & கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் ரூ.5லட்சம் வரையிலான வங்கி முதலீடுகளைக் காப்பீடு செய்து விடும் என்பதால் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான உணர்வுடன் முழு மன அமைதியுடன் இருக்கலாம்.
“கடந்த பல்லாண்டுகளாகவே பாதுகாப்பான முதலீட்டு வடிவத்தை கட்டுமானம் செய்ய நம்பிக்கையான ஃபிக்சட் டெபாசிட்டுகள் இருந்து வருகின்றன,” என்கிறார் டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் நிதிச்சேவைகளுக்கான தலைமை தொழில் அலுவலர் கௌரவ்ஹஸ்ராடி. ” பல வித நம்பிக்கை வாய்ந்த சேவை நிறுவனங்களிடமிருந்து அதிக லாபம், நிலையான வருமானம் தரக்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட்ஸூக்கான அணுகுமுறைக்கு எமது ஃபிக்சட் டெபாசிட் சந்தை மூலம் சுலபமாக பெறும் வழியைத்தருவதே எங்களது நோக்கம். இந்த எளிய, பாதுகாப்பான ப்ளாட்ஃபார்மானது போட்டித்தன்மை நிறைந்த வட்டி விகிதத்தைத்தந்து அனுபவம் வாய்ந்த புதிய முதலீட்டாளர்கள் தமது செல்வத்தை நம்பிக்கையுடனும் அதிக சிரமமின்றியும் பெருக்கும் வாய்ப்புகளைத் தருகிறது.”
இது பற்றி சூர்யோதய ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் டிஜிட்டல் பேங்கிங் பிரிவுத்தலைவரான விஷால்சிங் கூறுகையில் “தனது வாடிக்கையாளர்களின் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு போட்டித்தன்மை நிறைந்த வட்டி விகிதத்தைத் தருவதைத்தனது இலக்காக சூர்யோதய் வங்கி எப்போதுமே வைத்துள்ளது. டெபாசிட்களை முழுமையாக ஆன்லைனில் திறந்து, இயக்கி வந்து, பின்னர் மூடும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு எங்களது டிஜிட்டல் டெபாசிட் திட்டம் தருகிறது .டாடா டிஜிட்டல் நிறுவனத்துடன் கைகோர்ப்பதால் எங்களது செயல்பாடுகள் விரிவடைந்து, இன்னும் பெரும் அளவிலான வாடிக்கையாளர்களுக்கும் இத்தகைய புதுமையான திட்டங்களை எங்களால் தர முடிகிறது,” என்றார்.