சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘மத்திய பட்ஜெட் 2026–2027: முக்கிய அம்சங்களும் பொருளாதார திசையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பட்டயக் கணக்காளர் ராம்ஜி கலந்துகொண்டு, மத்திய பட்ஜெட் குறித்து விரிவான மற்றும் விளக்கமான உரையாற்றினார். பட்ஜெட்டின் முக்கிய கொள்கை அறிவிப்புகள், நிதி முன்னுரிமைகள், வரி சீர்திருத்தங்கள் மற்றும் அவை நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் லக்ஷ்மிநாராயணசாமி, சுகுணா லக்ஷ்மிநாராயணசாமி, சுகுணா அறக்கட்டளையின் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், செயலாளர் மற்றும் இயக்குநர் சேகர், முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
