அரிய இதய நோயால் பாதிக்கப்பட்ட நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு வயது குழந்தைக்கு, கோவையில் முதல்முறையாக உயிர்காக்கும் ‘இன்ட்ரா கார்டியாக் ரிப்பேர்’ அறுவை சிகிச்சை, செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
நைஜீரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 5.9 கிலோ எடையுள்ள ஒரு வயது குழந்தைக்கு, அரிய மற்றும் சிக்கலான பிறவியிலேயே ஏற்பட்ட இதயக் குறைபாடு கண்டறியப்பட்டது.
பல துளைகள் மற்றும் தனித்தனி வால்வுகள் இல்லாமல் ஒரே பொதுவான வால்வு அமைப்பு இருப்பதனால், அரிய பிறவியிலேயே ஏற்பட்ட இந்த இதய குறைபாடு உயிருக்கு ஆபத்தானதாக இருந்தது.
இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, குழந்தைக்கு உடனடி மற்றும் சிக்கலான இதய திருத்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது.
இந்தக் குழந்தை முதலில் டாக்டர் தேவபிரசாத், மருத்துவ ஆலோசகர் – இன்டர்வேன்ஷனல் குழந்தை இதய மருத்துவரால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு நோய் உறுதிப்படுத்தப்பட்டதுடன் சிகிச்சைத் திட்டம் வகுக்கப்பட்டது.
தொடர்ந்து, குழந்தை இதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவ ஆலோசகர் டாக்டர் விஜய் சதாசிவம்
தலைமையில், இன்ட்ரா கார்டியாக் ரிப்பேர், எனப்படும் சிக்கலான இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையில் அவருடன்
இதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர் முதன்மை ஆலோசகர் டாக்டர் தியாகராஜ மூர்த்தி, ஜூனியர் மருத்துவ ஆலோசகர்கள் டாக்டர் பூர்ண சந்தர்,
டாக்டர் சிவரம் ஸ்ரீதரன், டாக்டர் ஸ்ரத்தா ஷெனாய் ஆகிய அறுவை சிகிச்சை குழு இணைந்து செயல்பட்டது.
நான்கு மணி நேரம் நீடித்த இந்த உயர் அபாய அறுவை சிகிச்சைக்கான இதய மயக்க சிகிச்சை பராமரிப்பை டாக்டர் நரேந்திரன் மேனன் மற்றும் டாக்டர் மணிகண்டன், கார்டியாக் அனஸ்தீசியாலஜி மருத்துவர்கள் சிறப்பாக மேற்கொண்டு, அறுவை சிகிச்சை முழுவதும் குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதை உறுதிசெய்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தைக்கு அறுவைச்சிகிச்சை பிந்தைய பராமரிப்பு தேவைப்பட்டது.
இந்த பராமரிப்பை, குழந்தை தீவிர சிகிச்சை நிபுணர்களான டாக்டர் இந்திராதேவி மற்றும் டாக்டர் கிருஷ்ணா சமீரா மேற்கொண்டனர்.
குழந்தை படிப்படியாக உடல்நிலையில் கணிசமான மேம்பாட்டை அடைந்து, தற்போது முழுமையான ஆரோக்கிய நிலையில் உள்ளது. குழந்தை விரைவில் நைஜீரியாவிற்கு பாதுகாப்பாகத் திரும்பத் தயாராக உள்ளது.
