ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில், கல்லூரி நாள் மற்றும் கலை விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார்.

இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு மாநில மருந்தாளுநர் கவுன்சிலின் தலைவரும், டெல்வின் ஃபார்முலேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னையின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரியின் முதல்வர் ஸ்ரீராம் ஆண்டறிக்கை வழங்கினார். துணை முதல்வர் கோபால் ராவ் வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி கலை விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கல்லூரி இதழ் வெளியிடப்பட்டது. தொடர்ந்து கல்லூரியின் பேராசிரியர் ஜெயப்பிரகாசம் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது.

சிறப்பு விருந்தினர் ஜெயசீலன், எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் ஆகியோர் கல்வி சார் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.