ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டின் 77-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் துணை முதல்வர் பூங்குழலி விழாவிற்குத் தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, சுதந்திர தின விழா சிறப்பு முகாம், குடியரசு தின விழா சிறப்பு முகாமில் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற மாணவர் தர்ஷன், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தேசிய மாணவர் படை சார்பில் பங்கேற்ற மாணவர் ஆகாஷ், மாணவி சந்தியா, மாணவி ஸ்வாதி ஆகியோர் விழாவில் பாராட்டப்பட்டனர். தொடர்ந்து சொற்பொழிவு, பாடல் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
