தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கோயம்புத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் காய்கறி அறிவியல் துறையின் சார்பாக வரும் டிசம்பர் 16ம் தேதி தளிர்கீரைகள் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.
மனித உடல்நலத்திற்கு தேவையான பெருமளவு சத்துத் தேவையை தளிர்கீரைகள் நிறைவு செய்கின்றன. தளிர் கீரைகளிலிருந்து பெறப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஊட்டச்சத்து நிறைந்தவையாகவும் உடல் நலத்தை மேம்படுத்துவதாகவும் உள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு தளிர்கீரைகள் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த திறன் பயிற்சி தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் செயல்முறை சாகுபடித்திறன்கள், ஊட்டச்சத்து நன்மைகள், உணவுப் பாதுகாப்பு வழிமுறைகள், தர நிலைநிறுத்தம், நீடித்த வருவாய், மதிப்பு கூட்டல், வணிகத்துக்கு வழிகாட்டல், சந்தை வாய்ப்புகள் என்ற தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பயிற்சிக் கட்டணமாக ரூ.2000 செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு
மின்னஞ்சல்: [email protected]
கைபேசி: 89036 94612
