கோவை இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் முடிவடைந்ததையொட்டி இதன் நிறைவு விழா அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா, வார்டு மெம்பர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து , இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கோகிலவாணி சிறப்புரையாற்றினார் மற்றும்பள்ளியில் கற்றலில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார். மேலும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.