எஸ். என். எஸ். கல்வி நிறுவனங்களின் 2024 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

குழுமங்களின் தலைவர் டாக்டர் எஸ்.என். சுப்ரமணியன், தாளாளர் டாக்டர் எஸ்.ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் டாக்டர் எஸ்.நளின் விமல் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மும்பையில் உள்ள சி5ஐ பிரைவேட் லிமிடெட்டின் திறமை கையகப்படுத்தல் துறையின் மூத்த மேலாளர் ஹேமல் தாக்கர் பங்கேற்றார். இன்றைய வேகமாக வளர்ந்து வரும் சமூகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) முக்கியப் பங்கு குறித்து அவர் வலியுறுத்தினார். மேலும், எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஜெனரேடிவ் ஏஐ இன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

எஸ். என். எஸ். நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல், மற்றும் இயக்குநர் அருணாசலம், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்.

மேலும் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.