டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் என்.ஐ.பி.எம். எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி உறுப்பினர் மனோகரன், கல்லூரியின் முதன்மை அதிகாரி டேனியல், முதல்வர் அனிதா மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசின் முன்னாள் டிஜிபி ஆஷிஷ் பெங்கரா தலைமை உரையாற்றி, ஆசிரியர்களே சிறந்த குடிமக்களை உருவாக்கும் தூண்களாக உள்ளனர் என்று பாராட்டினார். முன்னாள் துணை தலைமைச் செயலர் சபிதா, ஆசிரியர்கள் மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விழாவில் தமிழ்நாடு அளவில் 101 பேராசிரியர்கள் விருதுகளால் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவன ஆலோசகர் பேராசிரியர் வேணுகோபால் வரவேற்புரை வழங்க, எஸ்.என்.எஸ். பிஸ்பைன் இயக்குநர் பாமினி நன்றியுரை கூறினார்.