கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் 29ம் ஆண்டுவிழா அண்மையில் நடைப்பெற்றது.இதில், எஸ்.என்.ஆர்சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் விழாவிற்கு தலைமை தாங்கினார். மேலும்,கட்டிடவியல் துறை தலைவர் நிவேதிதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் கோபாலகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் மாணவர்களிடம் பேசும்போது, வாழ்க்கையை சிறந்ததாக மாற்ற விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு மிக முக்கியம். உயரத்தை அடைய வேண்டுமெனில் அதற்கு அயராத பயிற்சி மற்றும் முயற்சி மிக முக்கியம். வாய்ப்புக்காக காத்திருத்தல் என்பது கால விரயத்தை உண்டாக்கும், தகுதி உள்ளவர்களிடம் வாய்ப்பு தேடி வரும் என்று கூறினார்.

2 7

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து தகுதிகளின் அடிப்படையில் சிறந்த மாணவராக கட்டிடவியல் துறை முகுந்த் பிரணவ் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு வி.ராஜலட்சுமி நினைவு பரிசு,ரூ.4000 பரிசுத் தொகையுடன் கேடயம், மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதேப்போல், கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். பின்னர்,மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இறுதியாக, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் நிரஞ்சனா தேவி நன்றியுரையாற்றினார்.