சக்தி தகவல் தொடர்பியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் இயக்குநர் பொறுப்பு சர்மிளா தேசியக் கொடியை ஏற்றினார்.

SIIMA2 scaled

உன்னத் பாரத் அபியான் சார்பாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரி ஆசிரியர் குழு, தத்தெடுக்கப்பட்ட கிராமங்களான சுப்பே கவுண்டன் புதூர், தாத்தூர், வாழைக்கொம்பு நாகூர், பெரியபோது மற்றும் மாரப்ப கவுண்டன் புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா மற்றும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர்.