சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவின் தாக்கம் 2026’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் தாளாளர் லட்சுமி நாராயணசாமி மற்றும் சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினராக காக்னிசண்ட் டெக்னாலஜிஸ்ட் இயக்குனர் விஜயராகவன் கலந்துகொண்டு செயற்கை தொழில் நுட்பத்தின் அவசியம், தாக்கம், நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். செயற்கை தொழில் நுட்பத்தினை கவனமுடன் கையாள வேண்டும் எனவும் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் பேசினார்.

இதில் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு திறன் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கல்லூரியின் தாளாளர் லட்சுமி நாராயணசாமி வழங்கினார்.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் ராஜ்குமார், இயக்குனர் மற்றும் செயலர் சேகர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.